இருமல் மற்றும் சைனஸ் பிரச்சினைகள் இருக்கும்போது எந்த காயை தவிர்க்கணும் தெரியுமா ?

 
cold

பொதுவாக வெண்டைக்காயில் நிறைய நன்மைகள் உண்டு .குறிப்பாக சர்க்கரை நோய்க்கு ,மூளைக்கும் நல்ல மருந்து .ஆனால் இவ்ளோ நன்மைகள் உள்ள வென்டைக்காயை அதிகம் சாப்பிட்டால் என்ன பக்க விளைவு வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.வெண்டைக்காயை ஓவராய் சாப்பிடுவோருக்கு  வயிறு உப்புசம், வயிற்றுப் பிடிப்பு, போன்ற தொல்லைகள் உண்டாகும்
2.மேலும் வெண்டைக்காயை அதிகம் உண்போருக்கு வாயுத்தொல்லை அல்லது வயிற்றுப்போக்கு போன்ற தொல்லைகள் உண்டாகலாம் .  
3.சிலருக்கு  சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் இருக்கும் .அப்படி கிட்னி பிரச்சினை  இருக்கிறது என்றால் வெண்டைக்காயை கட்டாயம் தொட கூடாது .
4.சிலருக்கு  பித்தப்பை கல் இருக்கும் ,அப்படி பித்தப்பை கல் உருவாகவும் வெண்டைக்காய் காரணமாக அமையும்.

home remedy for cough
5.மேலும் வெண்டைக்காயில் அதிகம் எண்ணெய் ஊற்றி சாப்பிடுவது உண்டு ,அப்படி அதிகம் எண்ணெய் ஊற்றி  வறுவல் செய்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
6.ஏனெனில் இவ்வாறு வெண்டைக்காயில் எண்ணெயில் முக்கி சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்குமாம்.  
7. சிலருக்கு  இருமல் மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் இருக்கும் .அப்படி இருப்பின் வெண்டைக்காய் சாப்பிடுவதை அவர்கள் தவிர்த்தல் நலம்
8.சிலருக்கு செரிமானக் கட்டமைப்பு பலவீனமாக இருக்கும் .அப்படி இருப்பவர்கள் வெண்டைக்காய் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்பதால் அவர்களும் தவிர்த்தல் நலம்