மருத்துவர் ஆலோசனையில்லாமல் மருந்து சாப்பிடுவதால் உண்டாகும் ஆபத்து .

 
tablet

பொதுவாக சளி ,காய்ச்சல் ,வயிற்று போக்கு போன்ற நோய்கள் நமக்கு உண்டாகின்றன .இந்த நோய்கள் மனிதனுக்கு வந்து விட்டால் உடனே அருகிலுள்ள மருந்து கடையில் ஆன்டி பயாடிக் மருந்துகளை வாங்கி சாப்பிடுகிறோம் .இதனால் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் காணலாம்
1. மருந்துகளை இப்படி முறையான மருத்துவர் ஆலோசனையில்லாமல் வாங்கி சாப்பிடக்கூடாது .இதனால் எதிர் விளைவுகள் சில நேரம் உண்டாகும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுகின்றனர் .
2.இப்படி முறையில்லாமல் வாங்கி சாப்பிடுவதால் நாளடைவில் நுண்ணுயிர்களை அந்த மருந்துகள் எதிர்க்காது என்றும் எச்சரிக்கின்றனர் .இதனால் உண்டாகும் விளைவுகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

tablet

3.சிலர் காய்ச்சல் வந்தவுடன் அருகிலுள்ள மெடிக்களுக்கு ஓடுவார்கள்  ., காய்ச்சல் என்று கூறி மருந்துக் கடைகளில் அவர்  ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்
4.இதை ஒரு நாள் மட்டும் உட்கொள்ளலாமா என்று கேட்டால் கண்டிப்பாகக் கூடாது என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்
5.நோய்த் தொற்று கிருமியை எதிர்க்கக் கூடிய நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை ஒரு நாளைக்கு மட்டும் நாம் பயன்படுத்தும் போது நாளடைவில், அந்தக் கிருமி நுண்ணுயிர்க் கொல்லி மருந்தையே எதிர்க்கக் கூடிய திறனை பெற்று நம்மை ஆபத்தில் தள்ளி விடும்
6.நோய்த் தொற்றை எதிர்க்கும் ஆற்றலை அந்த மருந்து இழந்து விட்டால், நம் உடல் கடுமையான சிக்கலைச் சந்திக்கும். நோய்த் தொற்றில் இருந்து உடல் சீரடையாமல் போகும் ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்