பாப்கானில் அடங்கியுள்ள பயங்கரம்

 
popcorn popcorn

பொதுவாக 40 வயதுக்கு பின்னர்  உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவை சாப்பிட வேண்டும் ,அந்த வகையில் அதிக கொழுப்பு மற்றும் சோடியம் உணவுகளை தவிர்த்து விட்டு நார் சத்துள்ள உணவுகளை சேர்த்து கொள்ள வேண்டும் ,
1.க்ரீன் டீ, ஜூஸ், காய்கறி சாறு, தேங்காய் தண்ணீர், எலுமிச்சைப்பழம் போன்றவற்றுடன் தண்ணீரும் ஒரு நாளைக்கு 2முதல் 3 லிட்டர் வரை குடித்து வரலாம்
2.கீழ்க்கண்ட உணவுகளை 40 வயதை நெருங்கும் நபர்கள்  தவிர்ப்பது தான் உடல் நலத்திற்கு நல்லது.காஃபின் உள்ள உணவுகளை தவிர்த்தல் நல்லது .இவை அதிகமானால் அமிலத்தன்மை உடலில் அதிகரிக்கும் மேலும் சில உணவுகளை பற்றி பார்க்கலாம்

heart

3.செயற்கை புரதங்களில் உள்ள கொழுப்பு மற்றும் செயற்கையான இனிப்புகளை தவிர்க்கலாம்  
4.ஹைட்ரஜனேற்றப்பட்ட எண்ணெய்கள் தவிர்க்கலாம்  . இது கல்லீரலுக்கு நச்சுத் தன்மையையும், உங்களின் இதயத்திற்கு தீங்கையும் விளைவிக்க கூடியது.
5.சர்க்கரை சேர்த்த குளிர் பானங்களை தவிர்த்தல் நலம் . 40 வயதைக் கடந்த பிறகும் இந்த பானங்கள் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது கிடையாது.
6., சினிமா தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் பாப்கார்னில் ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை இதய நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.அதனால் இதை தவிர்க்கலாம்
7.சோயா சாஸ் நிறைந்துள்ள உணவுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து விடுவது தான் மிகவும் நல்லது. ஒரு டீஸ்பூன் சோயா சாஸில் 879 மில்லிகிராம் சோடியம் நிறைந்திருக்கும்