புகை பிடிப்பதால் இந்த நோயும் வருதாம் -புதுசா கண்டுபுடிச்சிருக்காங்க
பொதுவாக புகை பழக்கமானது ஆரம்பத்தில் விருந்தினர் போல் எப்போதாவது வரும் ,நாளடைவில் அது நிரந்தரமாக நம் உடலில் தங்கி விடும் .பின்னர் தம் அடிக்காமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு நம்மை தள்ளி விடும் .இதனால் உண்டாகும் பாதிப்பு பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.இதன் எதிரொலியாக பதட்டம் ,கோபம் ,மனசோர்வு போன்ற நோய்கள் உண்டாகும் ,
2.அதன் பின்னர் ஓவராக புகை பிடிப்பதால் இருமல் ,நுரையீரல பாதிப்பு ,கேன்சர் போன்ற நோய்கள் உண்டாகும் .
3.இப்போது புதிய ஆய்வில் மேலும் பல நுரையீரலை காலி செய்யும் நோய்களுக்கும் இந்த புகை பழக்கம்தான் காரணம் என்று கண்டறிந்துள்ளனர் ,
4.புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் பலர் அந்த பழக்கத்தை கைவிடுவதில்லை.
5.ஆனால் சிகரெட் பிடிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.
6.உயிருக்கு ஆபத்தான சிக்கல்களுக்கும் இந்த புகை பழக்கம் ஒரு முக்கிய காரணமாகும்.
7.இந்த புகை பழக்கத்தால் சுவாச அமைப்பு, இரத்த ஓட்டம், தோல் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.