டீ குடிப்பதால் என்னென்ன கேடுகள் உண்டாகும் தெரியுமா ?

 
vendhayam tea

பொதுவாக  அதிகமாக டீ குடிப்பதால் உடலில் பித்தம் அதிகமாகும் மேலும் யாரெல்லாம் எப்போது டீ குடிக்க வேண்டும் அல்லது குடிக்க கூடாது என்று இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக  இரவு வேலை செய்பவர்கள் மாலையில் தேநீர் அருந்தலாம்.
2.மேலும் சிலருக்கு அசிடிட்டி மற்றும் இரைப்பை  பிரச்சினை  இல்லாதவர்கள் மாலையில் டீ குடிக்கலாம்.

tea
3.சிலருக்கு சரியான செரிமானம், வழக்கமான உணவு உட்கொள்ளல் மற்றும் தூக்கம் பிரச்சனை இருக்கும் . இந்த பிரச்சினை இல்லாதவர்கள் மாலையில் டீ குடிக்கலாம்.
4.தூக்கம் பிரச்சனை உள்ளவர்கள் மாலையில் தேநீர் அருந்தினால் இரவில் தூக்கம் வராது .
5.சிலருக்கு  மலச்சிக்கல், அமிலத்தன்மை அல்லது வாயு பிரச்சனை இருக்கும் .இப்படி உள்ளவர்கள் டீயை அருந்தக்கூடாது.
6.சிலர் எடை குறைவாக இருப்பார்கள் .இப்படியுள்ளவரோடு , முடி, தோல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் டீ மற்றும் காபியைத் தவிர்த்தல் நலம்   
7.சிலருக்கு ஹார்மோன் பிரச்னைகள் இருக்கும் .இப்படி இருந்தால் உடனே இந்தப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.