மீந்த இந்த உணவையெல்லாம் மீண்டும் சூடு பண்ணி சாப்பிடுறவங்கள வூடு கட்டி அடிக்கும் நோய்கள்

 
corona new variant symptoms alert doctor

உணவே மருந்து என்ற பழமொழி நாம் செய்யும் ஒரு சில தவறால் உணவுகள் விஷமாக மாறிவிடுகிறது. சமைத்த உணவுகள் மீதம் உள்ளதை பிரிட்ஜில் வைத்து பசிக்கும் போது மீண்டும் சூடாக்கி உண்கிறோம்.

ஆனால் எல்லா உணவுகளையும் சூடுபடுத்தி சாப்பிட முடியாது. இது மாதிரியான செயல் நம் உயிரையே பறித்து விடலாம்.

சில உணவுகளை சூடுபடுத்தும் போது அதில் நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது. ஆதலால் இந்த உணவுகளை தவறி கூட சூடுபடுத்தி விடாதீர்கள்.

சிக்கனில் அதிக புரதசத்து உள்ளதால் சமைத்த சிக்கனை சூடுபடுத்துவதால் செரிமான சிக்கல் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அதை மீண்டும் சூடுபடுத்தாமல் அப்படியே ரொட்டியில் வைத்தோ அல்லது சாலட்டாக சாப்பிடுவது நல்லது.

இரண்டாவது முறையாக சுடவைக்க கூடாது என்ற உணவுகளில் முட்டையும் இடம்பிடித்துள்ளது. அப்படி செய்வதால் முட்டையில் நச்சு தன்மை உண்டாக வாய்ப்புள்ளது. இது இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

சமைத்த உருளைக்கிழங்கை நீண்ட நேரத்திற்கு அப்படியே வைத்தாலோ அல்லது மீண்டும் சூடாக்கினாலோ அவை விஷமாக மாறலாம். போட்யூலிசம் காரணமாக இந்த மாறுதல் ஏற்படுகிறது. ஆகையால் இதை சமைத்த உடனேயே முழுதாக சாப்பிட்டுவிடுவது நல்லது.

மற்ற பச்சை காய்கறிகளைப் போலவே கீரையில் இரும்பு மற்றும் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. சமைத்த கீரை மீண்டும் சூடாக்கப்பட்டால் இயற்கையாக இருக்கும் நைட்ரேட்டின் அளவை விட அதிகமாகிறது. இது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்

உணவு விஷமாவதேன்?

பண்டிகை என்றாலே பலகாரம் அதிகம் சாப்பிடுவார்கள். அதுவும், நெய், எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் வயிறு பிரச்சினையாகிவிடும். அதேபோல் ஒன்றுக்கு ஒன்று ஒத்துக்கொள்ளாத பொருட்களை சேர்த்து சாப்பிடுவதன் மூலமும் ஒவ்வாமை ஏற்பட்டு சிலருக்கு ஃபுட் பாய்சன் ஆகிவிடும் வாய்ப்பும் உள்ளது. இதனால் பண்டிகை நாளும் அதுவுமாக வயிற்றுவலி, டயாரியா என்று படுத்துக்கொள்வார்கள். மருத்துவமனைக்கு ஓடினால் கையில் இருக்கும் பணத்தை பெரிதாக கறந்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள்.

உணவில் ருசியை அதிகரிக்க அன்றாட சமையலில் இஞ்சி பயன்படுத்துகிறோம். இது மிகச்சிறந்த விஷ முறிவு மருந்து. இது அனைத்து வகையான ஜீரணக்கோளாறுகளையும் சரி செய்யும். ஒரு டேபிள் ஸ்பூன் தேனுடன் சிறிதளவு இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் எந்த விஷமாக இருந்தாலும் ஓடிவிடும். வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

* காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை நன்றாகக் கழுவிய பிறகே பயன்படுத்த வேண்டும்.

* கெட்டுப்போன உணவுகளால் மட்டுமல்ல, சுகாதாரமற்ற தண்ணீராலும் ஃபுட் பாய்சன் ஏற்படலாம். எனவே, தண்ணீரில் கவனம் தேவை.
 
* சுகாதாரமில்லாத இடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

* மழைக்காலத்தில் சமைக்காத உணவுகளான சாலட், தயிர், மில்க் ஷேக் போன்றவற்றைத் தவிர்க்கலாம். ஏனென்றால், குளிர்ந்த உணவுகளில் கிருமிகளின் தாக்கம் அதிகம் உருவாக வாய்ப்புகள் அதிகம். சூடான உணவுகளே பாதுகாப்பானவை.

* சமைப்பவரும் பரிமாறுபவரும் கைகளை நன்றாகச் சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.

* சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவுவதும் நகங்களைச் சுத்தமாகவைத்திருப்பதும் அவசியம்.

* உணவுக்கும் ஆயுள் உண்டு. சமைத்த உணவு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு கிருமித்தொற்று காரணமாக  கெட்டுப் போகத் தொடங்கும்.

* குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.’