சர்க்கரை நோய்க்கு இனிநொடி பொழுதில் தயாரிக்கப்படும் இந்த பொடி போதும்!

 
sugar sugar

நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு இயல்பாக இருப்பதைவிட, அதிகமாக இருப்பதையே சர்க்கரை நோய் என்கிறோம். பல்வேறு காரணங்களில், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகிறது. உடல் சீராக இயங்குவதற்கு சர்க்கரை சத்து அவசியம். நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை, ஆற்றலாக மாற்ற இன்சுலின் என்ற ஹார்மோன் தேவை.சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோயானது அதிகரித்து வரும் பெருத்த ஆபத்தாக இருக்கிறது. மோசமான வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களால் உருவாகும் இந்த பிரச்னையை அனுபவிக்கும்போதுதான் உணர்கிறோம். ஆனால் அவ்வாறு நீரிழ்வு நோய் வந்த பிறகு தினசரி மாத்திரைகளை உட்கொள்வதை தவிர கவலைப் படுவதில் பிரயோஜனமில்லை.
 இரத்ததில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உண்டாக்கும் இந்த நீரிழிவு நோய்க்கு ஒரே தீர்வு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதுதான். அப்படி சில நேரங்களில் மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் தவிர்க்கும்போது, மன அழுத்தம் , சாப்பிட்ட உணவு இப்படி பல காரணங்களால் திடீரென சர்க்கரை அளவு அதிகரிக்கும். அந்த நேரத்தில் சில ஆயுர்வேத மூலிகை மருந்துகள் நமக்கு கைக்கொடுக்கின்றன. இவற்றை நீங்கள் சாப்பிட நினைத்தால் முதலில் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அவர் எந்த பக்க்விளைவுகளையும் ஏற்படுத்தாது, சாப்பிடலாம் என்று கூறினால் இவற்றை சாப்பிடுங்கள்.

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

வரக்கொத்தமல்லி – அரை கிலோ

வெந்தயம் – கால் கிலோ

தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சாப்ப்பிட்டு வரவும்.