பல ஆபரேஷன் பண்ணியும் பலனில்லாத பைல்ஸ் பிரச்சினைய துரத்தியடிக்கும் துத்தி இலை .

 
thuthi ilai for piles

கொடி துத்தி, ஒட்ட துத்தி, எலிச் செவிதுத்தி, கருந்துத்தி, பசுந்துத்தி,சிறு துத்தி, பெருந்துத்தி, நிலத்துத்தி, கண்டு துத்தி, ஐஇதழ் துத்தி பனியாரத்துத்தி, காட்டு துத்தி, பொட்டக துத்தி, என பல பெயர்கள் இந்த கீரைக்கு உண்டு. வேர், பூ, இலை மட்டை என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் கொண்ட செடியாகும்.

மற்ற கீரைகளை போன்று இதை சமையலுக்கு யாரும் பயன்படுத்து வதில்லை, சமைத்து அளவாக சாப்பிடலாம் மலத்தை இளக்கி வெளியேற்றவும், உடல் புண்ணை குணமாக்கவும் உடலை தேற்றவும் இயற்கை மருத்துவத்தில் பெரும் பயன் அளிக்கிறது. துத்தி இலைகளை விளக்கெண்ணையுடன் மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் (கோவனம்) போன்று கட்டி கொண்டால் ரத்த மூலம், கீழ் மூலம், வலி, குத்தல், எரிச்சல், மூலவீக்கம், அனைத்தும் சரியாகி நலம் உண்டாகும்.

மூல நோய் தீர்க்கும் துத்தி இலை

முறையில்லாத உணவுப் பழக்கத்தாலயும் வாழ்க்கை முறையினாலயும் மக்கள் மூலநோய்க்கு ஆளாகுறாங்க. இந்த துத்தி இலை மூல நோய்க்கு சிறந்த மருந்தா இருக்கு. ஆமணக்கு எண்ணெய் விட்டு துத்தி இலைய வதக்கி, மூலத்தால வர்ற கட்டி-புண்ணுக மேல ஒத்தடமிட்டு வந்தா, மூலநோய்க்கு நல்ல குணம் கிடைக்கும்.

மூலத்தை குணமாக்கும் துத்திக்கீரை

துத்தி வேர் பவுடர், திரிபலா, இந்துப்பு, லவங்கபட்டை பொடிகளுடன் தண்ணீரில் கலந்து நன்றாக வாய் கொப்பளித்தால் பல் ஈறுகளில் ரத்த கசிவு குணமாகும். துத்தி இலையை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூடு நீங்கும். ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்து சாப்பிட முற்றிலும் குணமாகும்.

அரிசி மாவுடன் துத்தி இலை சாற்றையும் கலந்து கிண்டி, கட்டிகள் மீது பூசினால் பழுத்து உடைந்து குணமாகும். துத்தி பூ சூரணத்தை நாட்டுச் சர்க்கரை, நாட்டு மாட்டு பாலில் கலந்து முறையாக சாப்பிட்டால் ரத்த கெந்தி, நுரையீரல் கபம், இருமல், காசநோய், இரைப்பு போன்ற குறைகள் முற்றிலும் குணமாகும்.?துத்தி விதைகளை பொடிசெய்து கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து 200 முதல் 400 மில்லி கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், சரும நோய்கள், உடல்சூடு, தொழு நோய், கருமேக, வென்மேக நோய், மேக அனல் முதலியவை கட்டுப்படுகிறது.

பல் ஈறு பிரச்சனை தீர:

பல் ஈறு பிரச்சனையால் அவதியுற்றுக்கொண்டிருந்தால்  துத்தி இலைக் குடிநீரை வாயிலிட்டு கொப்பளிக்கவேண்டும்

உடல் வலி, மலச்சிக்கல் தீர:

கொதிக்குற நீரில் துத்தி இலையப் போட்டு வேகவச்சு, அந்த தண்ணிய ஒரு துணியில நனைச்சுப் பிழிஞ்சு, உடல் வலிக்கு ஒத்தடமிட்டா உடல் வலி தீரும். இலைய கசாயம் செஞ்சு அதோட, பாலும் சக்கரையும் சேத்து குடிச்சு வந்தா, மலச் சிக்கல் தீரும். அதோடு மூலச்சூடும் தணியும்! அப்புறம்... இந்த துத்தி இலைய பருப்பு சேத்து சாப்பாட்டுல கலந்து சாப்பிடலாம். நம்ம முன்னோர்களெல்லாம் இந்த துத்திய உணவாதான் பாத்தாங்க, நாமதான் மருந்தா பாக்குறோம். துத்தி விதையில கூட நல்ல மருத்துவ குணங்கள் இருக்கு.”

துத்தி விதையின் பயன்கள்:

அதிக உடல் சூட்டுப் பிரச்சனைஇருந்தால்  துத்தி விதைப் பொடியை  சர்க்கரை சேர்த்து 1/2 கிராம் வீதம் தினமும் உண்டு வர வேண்டும்

துத்தி விதைய கரிநெருப்புல போட்டு, அதிலயிருந்து வர்ற புகைய குழந்தைகளின் மலவாயில் படும்படி செய்தா, வயித்துப் புழுக்கள் வெளியேறும். துத்தி விதைக் கசாயத்த தினமும் (15-30 மிலி) குடிச்சு வந்தா பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல், மூல நோய் குணமாகும்.”