கருப்பு மிளகுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் எந்த நோய் விலகி ஓடும் தெரியுமா ?
பொதுவாக நமக்கு மழை காலம் வந்து விட்டாலே பல்வேறு நோய்கள் எல்லாம் வந்து விடும் அதனால் மழை காலத்தை நோய்களின் காலம் என்று கூறுவர் இந்த காலத்தில் வரும் வறட்டு இருமல் நம்மை படுத்தி எடுக்கும்
அதனால் வறட்டு இருமல் பிரச்சனை சரி செய்ய வழி முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.மழை காலங்களில் நம் உடலுக்கு நிறைய நோய் தொற்றுகள் ஏற்படும்
2.இந்த நோய் தொற்றுகளில் இருந்து நம்மை பாதுகாக்க கொள்ள நாம் பல்வேறு வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி பலனை பெறலாம்
3.அப்படிநம்மை வாட்டி வதைக்கும் வறட்டு இருமலில் இருந்து நாம் விலக சில வீட்டு வைத்தியங்களை நாம் பார்க்கலாம்.
4.கொடுமையான வரட்டு இருமல் போக வெதுவெதுப்பான நீரில் நான்கு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
5.இது மட்டும் இல்லாமல் வறட்டு இருமல் போக இஞ்சி சாறு குடித்து வரலாம்.
6.குறிப்பாக பச்சை வெங்காயம் சாப்பிடுவது வறட்டு இருமல் பிரச்சனைக்கு ஒரு முக்கியமான மருந்தாக இருக்கிறது
7.இந்த பச்சை வெங்காயம் சளி பிரச்சனையை தீர்க்கவும் உதவுகிறது.
8.இது மட்டும் இல்லாமல் வறட்டு இருமல் போக ஐந்து கருப்பு மிளகு பொடி செய்து கொள்ளவும் .
9.பின்னர் பொடி செய்த மிளகுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் பிரச்சனை நீங்கும்.
10.எனவே ஆரோக்கியம் நிறைந்த வீட்டு வைத்தியத்தில் மேற்கூறிய படி வறட்டு இருமலை விரட்டி அடிக்கலாம் .