தேங்காய் எண்ணெயில் கற்ப்பூரம் சேர்த்து நெஞ்சில் தேச்சா என்னாகும் தெரியுமா ?
பொதுவாக குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்று சாதாரண விஷயம் .இந்த சளியை குறைக்க உடனே ஆங்கில வைத்தியரிடம் சென்று மருந்து மாத்திரை சாப்பிடுவதை விட நம் வீட்டிற்குள் இருக்கும் சில பொருட்களை கொண்டே செலவில்லாமல் சிகிச்சை செய்து குணப்படுத்தலாம் .இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.சில குழந்தையின் நெஞ்சு சளி சேர்ந்து படுத்தி எடுக்கும் ,இதற்கு முதலில் தேங்காய் எண்ணெயை சிறிது
சூடாக்கி எடுத்து கொள்ளவும்.அதில் கற்பூரத்தை போட்டு இது நன்றாக
ஆறிய பின் அந்த எண்ணெயை உள்ளங்கையில்
தேய்த்து குழந்தையின் மார்பு பகுதியில்
நன்றாக தடவி விடுங்கள். உடனே குழந்தையின் நெஞ்சு சளி கரையும்
2.
இந்த கற்ப்பூர சிகிச்சைக்கு குறைந்த அளவு கற்பூரத்தை பயன்படுத்துங்கள். ஏனெனில்
அதிகளவு கற்பூரத்தை பயன்படுத்தும் போது
அது குழந்தையின் சருமத்தை பாதிக்க கூடும்.அதனால் குறைந்த அளவே கற்பூரம் போதும்
3.சில குழந்தைக்கு மாதக்கணக்கில் சளி இருக்கும் .அப்போது 50 மில்லி தண்ணீரில் 2 பல் பூண்டை போட்டு
10 நிமிடங்கள் வரை வேக விடவும். இந்த
தண்ணீரை ஆறிய பிறகு எடுத்து 3 மணி
நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு கொடுக்கவும் .
3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கலாம் .இந்த பூண்டு நீர் சளியை கரைக்கும் ஆற்றல் கொண்டது