விளக்கெண்ணெயுடன் தயிர் சேர்த்து தடவி வந்தால் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?
1.பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட நாம் விளக்கெண்ணையை பயன்படுத்தலாம்.
2.பொதுவாகவே பொடுகு பிரச்சனை வந்து விட்டால் அது முடியின் அழகை கெடுப்பது மட்டுமில்லாமல் வேர்களையும் வலு இழக்க செய்து முடி உதிர்வை ஏற்படுத்துகிறது.
3.பொடுகு நீக்க ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் தேயிலை மரயெண்ணெய் மற்றும் இரண்டு டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடம் முடியில் தடவ வேண்டும். அப்படி ஒரு வாரத்திற்கு இரண்டிலிருந்து மூன்று முறை பயன்படுத்தினால் பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
4.மேலும் விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தடவி வந்தால் முடியின் வறட்சியை நீக்கி வலிமையாக்குவது மட்டுமில்லாமல் அழகாகவும் நீளமாகவும் வளர உதவும்.
5.இது மட்டும் இல்லாமல் விளக்கெண்ணெயுடன் தயிர் சேர்த்து தடவி வந்தாலும் பொடுகு பிரச்சனைக்கு சிறந்தது.
6.விளக்கெண்ணெயுடன் மருதாணி சேர்த்து தடவி வந்தால் முடி கருமையாகவும் வளர உதவும்.