குழந்தைக்கும் கொலஸ்ட்ரால் வருமா ?இதை படிங்க புரியும்
பொதுவாக இன்று பலருக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சினை இருக்கிறது .பெரியவர்களுக்கு மட்டுல்லாது குழந்தைக்கும் கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளது .எனவே குழந்தைக்கு கொலஸ்ட்ராலை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக ஒருவரின் உடலில் கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருப்பது எந்தவித அறிகுறிகளையும் வெளியில் காட்டாது.
2.ஆகவே பெற்றோர் குழந்தைக்கு அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டால் தான் கொலஸ்ட்ரால் அதிகளவில் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
3.கொலஸ்ட்ராலை குறைக்க ஜங்க் புட் எனப்படும் எண்ணெயில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது
4.குழந்தைக்கு கொலஸ்ட்ராலை குறைக்க அதிகளவு இனிப்பு பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
5.குழந்தைக்கு கொலஸ்ட்ராலை கூடும் இனிப்பு பொருட்கள் மற்றும் கேக் போன்ற உணவுகளில் அதிக கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ளது . இவை கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து விடுகிறது.:
6.கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க குழந்தைகளை தினசரி உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும். 7.குழந்தைக்கு கொலஸ்ட்ராலை குறைக்க தினந்தோறும் அறுபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யணும் .இப்படி செய்வதால், குழந்தைகளின் உடலில் இருக்கும் அதிகளவிலான கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
8.மேலும் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப அவர்களின் உடல் எடையானது கட்டுக்குள் இருக்கும்படி பெற்றோர்கள் பார்த்து கொள்ளணும்
9.குழந்தைக்கு கொலஸ்ட்ராலை குறைக்க உடல் கொழுப்பை குறைக்க உதவும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். அதில் முக்கியமானது “கொள்ளு”.
10..அடிக்கடி கொள்ளு சாப்பிட்டால், குழந்தைக்கு கொலஸ்ட்ராலை குறைக்கும்