கை நடுக்க பிரச்சினைக்கு கை கண்ட வைத்திய முறைகள்
பொதுவாக சிலருக்கு கை நடுக்கம் இருக்கும் .அவர்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பார்கள் .அதனால் மாலை 6 மணிக்கு மேல் குடிக்கவில்லையென்றால் கை நடுக்கம் உண்டாகி விடும் .பின்னர் அவர்கள் மது குடித்து விட்டால் அந்த நடுக்கம் போய் விடும் ஆனால் மேலும் சில காரணங்களால் பலருக்கும் கை நடுக்கம் உண்டாகும் அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.பொதுவாக திடீரென்று நமக்கு கைகள் நடுங்குவதற்கு காரணம் பதட்டம் உடலில் தோன்றுவது .
2.சிலரின் உடலில் பயம், மனச்சோர்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவைகள் ஏற்படும் ,அப்போது அட்ரீனலின் உற்பத்தியை அதிகரிக்கும்போது அவர்கள் உடலில் பதட்டம் ஏற்படுகிறது.
3.சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் கை நடுக்க பிரச்சினை அதிகமாக வரும். அதனால் சர்க்கரை அளவை நாம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
4.சிலருக்கு உடலுக்கு தேவையான அளவை விட ரத்தத்தில் குறைந்த அளவு சர்க்கரை இருக்கும் .இப்படி இருந் ந்தால் சிலருக்கு கைகள் நடுங்க ஆரம்பித்து ஆரோக்கியம் சிதைந்து விடும்
5.சிலருக்கு நரம்பு மண்டலத்தில் பிரச்சினை இருக்கும். இதனால் கை நடுக்கம் வரும்
6.இன்னும் சிலருக்கு ரத்த ஓட்டப் பிரச்சினை ஏற்படும் போது கை நடுக்கம் கொடுக்கும்.
7. சிலருக்கு வயது முதிர்ச்சியின் காரணமாக அல்சைமர், பர்கின்சன் பிரச்சினைகள் ஏற்படும். அப்போது, எலும்பு மற்றும் நரம்பு வலிமை குறையும். அப்போது, கை நடுக்கம் அதிகரிக்கும்.
8.சிலருக்கு தைராய்டு ஹார்மோன் பிரச்சினை இருக்கும். அப்போது, கை நடுக்கம் அதிகரிக்கும்.
9.இவர்களுக்கு தைராய்டு ஹார்மோன்ஸ் அதிகமாக சுரந்தால் அதை ஹைபர் தைராய்டிசம் என்று கூறுவார்கள். அப்போது, கை நடுக்கம் அதிகரிக்கும்.
10.இந்த ஹைபர் தைராய்டிசம் அதிகரிக்கும்போது கை பயங்கரமாக நடுங்கும்.அதனால் அதை சரி செய்ய வேண்டும்