காதுகளை பாதுகாக்க ஹெட்போனை எப்படி யூஸ் செய்யனும் தெரியுமா ?

 
ear pone ear pone

பொதுவாக  ஹெட் போன் அதிகமாக  பயன்படுத்துவதால் நம் காதுகளுக்கு பல்வேறு கேடுகள் உண்டாகிறது .அதனால் தேவையில்லாமல் இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் .இந்த ஹெட் போன் பயன்பாட்டின் தீமைகள் குறித்து இந்த பதிவில் பாக்கலாம் 
 
1.இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களும் ஹெட்ஃபோன்களை (புளூடூத்) உபயோகப்படுத்துகின்றனர்  
2.இதில் ஒரு சிலர் அழைப்புகளில் பேச வேண்டும் என்றால் மட்டுமே ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சிலர்  பாடல்களைக் கேட்க, வீடியோ பார்க்கவும் பயன்படுத்துகின்றனர் 
3.மறுபுறம் 24 மணி நேரத்தில் 14-15 மணிநேரமும் ஹெட்ஃபோன்களை பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர்  .
4.நீங்கள் தினமும் புளூடூத்தை அதிகமாக பயன்படுத்துபவராக இருந்தால் இனி அதை போதுமானவரை குறைத்து கொள்ளுங்கள்  
5.மேலும் டாக்டர்  கருத்துப்படி ஹெட்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் கேட்கும் திறன் குறைந்து விடும் என்று கூறுகின்றனர் 
 6.சிலர்  தேவைகளுக்காக ஹெட்ஃபோன்களை பயன்படுத்தினாலும், ஒலியின் அளவை 60 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து கொள்ளும்படி மருத்துவர்கள் கூறுகின்றனர் .
7.மேலும் காதுகளை சுத்தம் செய்ய ஹேர் பின், சாவி போன்ற விஷயங்களை பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. 
8.குளித்து முடித்த பிறகு சுத்தமான இயர் பட்ஸ் அல்லது காட்டன் துணியால் காதுகளின் வெளிப்புறத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம்.