பெண்களுக்கு குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பாலை சுரக்க வைக்க உதவும் வழிகள்
பொதுவாக சில வழிமுறைகளை பெண்கள் கடை பிடித்தால் பெண்களுக்கு பால் சுரப்பு நன்றாக இருக்கும் அந்த வழி முறைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.தாய்மார்கள் முடிந்தவரை குழந்தைக்கு ஒரு நாளில் பலமுறை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்வது நலம்
2.ஆரம்பக் கட்டத்தில் குழந்தை அதிகமாக தூங்கும்பொழுது இதை செய்வது கடினமாக இருக்கலாம். 3.இருப்பினும் சரியான இடைவெளிகளில் குழந்தைக்கு தவறாமல் பால் கொடுக்கவும்.
4.ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுதும், மார்பகங்கள் ஹார்மோன்களை வெளியிடுகின்றன.
5.இந்த ஹார்மோன்கள் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்தும்.
6.ஆகையால் நீங்கள் குழந்தைக்கு எவ்வளவு தாய்ப்பால் கொடுக்கிறீர்களோ, அதற்கு ஏற்ப உங்கள் குழந்தையின் தேவைக்கு ஏற்ற பாலும் சுரக்கத் தொடங்கிவிடும்.
7.குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
8.ஏனெனில் தாய்ப்பாலில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. தாய்மார்கள் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
9.தாய்மார்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்காத நிலையில் தாய்ப்பால் சுரப்பு பாதிக்கப்படலாம்.
10.அதனால் குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுத்த பிறகும் பெண்களுக்கு உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும்.


