வெயிற் காலத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு இதை செய்யுங்க

 
sun

பொதுவாக கோடை காலத்தில் நம் உடல் ஆரோக்கியத்துக்கு சில வகையான குறிப்புகளை பின் பற்ற வேண்டும் .நாம் குளிர்காலத்தில் இருந்ததை போல நிறைய நான் வெஜ் உணவுகளை சேர்த்து கொண்டால் உடல் சூடாகி ,பல நோய்களை கொடுக்கும் ,மேலும் வெயில் காலத்தில் நீரிழப்பு அதிகம் ஏற்படும் .எனவே இந்த வெயிலை எப்படி சமாளிக்கலாம் என்று பார்க்கலாம் .
1.வெயிற் காலத்தில் தண்ணீர், மோர், கரும்புச்சாறு மற்றும் இளநீர் ஆகியவற்றை தினமும் குடிக்க வேண்டும்.
2.வெயிற் காலத்தில் ஆரஞ்சு, தர்ப்பூசணி, திராட்சை, எலுமிச்சை, சாத்துக்குடி பழச்சாறு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.
3.வெயிற் காலத்தில் காபி, டீ குடிப்பதை முற்றுமாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
 4.வெயிற் காலத்தில்  உடல் ஆரோக்கியத்துக்கு வெள்ளரிக்காய், கேரட், புடலங்காய், கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
5.வெயிற் காலத்தில் கேழ்வரகை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள ,உடலுக்கு தேவையான ஆரோக்கியமும் குளிர்ச்சியும் கிடைக்கும்.
6.வெயிற் காலத்தில்  உடல் ஆரோக்கியத்துக்கு மாமிச உணவுகள்  சாப்பிடாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.
7.வெயிற் காலத்தில்  உடல் ஆரோக்கியத்துக்கு வெளியில் செல்லும் போது குடை மற்றும் தொப்பி அணிந்து செல்லுதல் நல்லது.  
8.வெயிற் காலத்தில்  உடல் ஆரோக்கியத்துக்கு உடலுக்கு மென்மையான பருத்தி துணியிலான ஆடையை அணிவது சிறந்தது. .
9.வெயிற் காலத்தில்  உடல் ஆரோக்கியத்துக்கு படுக்கை அறையை காற்றோட்டம் உள்ளவாறு வைத்துக் கொள்ளுங்கள். 
10.வெயிற் காலத்தில்  உடல் ஆரோக்கியத்துக்கு காதுகளின் பின்புறம், மணிக்கட்டு, கழுத்து, முழங்கைகள், முழங்கால்கள் போன்ற பகுதிகளில் ஐஸ்கட்டி கொண்டு மசாஜ் செய்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.