ஆரோக்கியமான குழந்தை பெற இந்த டெஸ்ட் அவசியம் எடுங்க

 
baby

பொதுவாக தைராய்டு ஒரு பெண்ணுக்கு இருந்தால் அது நிறைய சிக்கல்களை உண்டாக்கும் .இது பற்றி இப்பதிவில் நாம் காணலாம்
1.பெரும்பாலான பெண்கள் ஹைப்போ தைராய்டினால் பாதிக்கப்படுகின்றனர்.
2.இதனால் உடல் எடை அதிகரிப்பு, ஒழுங்கற்ற மாதவிடாய் நிலை போன்றவை ஏற்படுகிறது.

thyroid
3.இவை கர்ப்பம் தரிப்பதில் சிக்கலை உண்டாக்குகின்றன. தாய்மை அடைவதற்கு முயற்சிக்கும் முன் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
4.அவ்வாறு தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பின் மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மூலம் TSH,T3,T4 ஹார்மோன்களின் சமநிலை பாதுகாக்க முடியும்.
5.இதனால் எளிதில் கர்ப்பம் அடையலாம். அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
6.குழந்தையின் முக்கிய பாகங்கள் முதல் மூன்று மாத காலத்தில் உற்பத்தியாகி வளர்ச்சி அடைகிறது. 7.குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம் உற்பத்தியாக மற்றும் வளர்ச்சியடைய தாயிடமிருந்து முதல் மூன்று மாத காலத்தில் உற்பத்தியாகி குழந்தைக்குச் செல்லும் தைராய்டு ஹார்மோன் மிக அவசியம்.
8.தாய்க்கு தைராய்டு பிரச்சினை இருக்கும் பட்சத்தில் அது கண்டறியப்படாமல் சிகிச்சை அளிக்கப்படாமல் இருந்தால் குழந்தை வளர்ச்சியை பாதிக்கும். கருச்சிதைவு ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளது.