நரம்பு சுருட்டலை விரட்டும் வழிகள்

 
vericose

பொதுவாக நீண்ட நேரம் நிற்பவர்கள் ,நீண்ட நேரம் அமர்ந்திருப்பார் ,உடற் பயிற்சி செய்யாதவர்கள் ,உடல் எடை அதிகம் உள்ளோர் போன்றோருக்கு இந்த நரம்பு சுருட்டல் நோய் கால்களில் ஏற்படும் .கால்களில் நரம்புகள் சுருட்டி கொண்டு ,ரத்த ஓட்டம் இல்லாதோருக்கு சிலந்தி வலை போல ரத்தம் கட்டி கொண்டு அவஸ்த்தை கொடுக்கும் .சிலருக்கு ரத்தம் கூட அதில் வந்து வலி அதிகமாகி இருக்கும் .அதனால் இந்த நோயை சரி செய்ய வில்லையென்றால் இதய பாதிப்பு கூட ஏற்படும்Varicose (spider) veins: Treatment, causes, symptoms, and more

அது மட்டுமல்லாமல் ரத்த ஓட்டத்தில் பிரச்சனைகள்,  ஹார்மோன் மாற்றங்கள், வயது, ஜீன் ஆகியவற்றால் கூட இந்த வெரிகோஸ் பிரச்சனை உண்டாகும். நரம்பு சுருட்டலை  அப்படியே விட்டால் பிரச்சனைகள் தரும்.

இதற்கு இயற்கை முறை தீர்வுகள்

1.இந்த வெரிக்கோஸ் நோயால் அவதிப்படுவோர் குப்பைமேனி, நெருஞ்சில், வில்வம், சுண்டைக்காய் மற்றும் சிறிய வெங்காயம் ஆகியவற்றை அரைத்து நரம்புச்சுருட்டல் உள்ள இடத்தில் தடவி வந்தால் வெரிக்கோஸ் ஓடி விடும் என சித்த மருத்துவம் கூறுகிறது

2.இந்த வெரிக்கோஸ் நோயால் அவதிப்படுவோர் துளசி, வசம்பு, மஞ்சள், சோற்றுக் கற்றாழை ஜெல் ஆகிய அனைத்தையும் நன்கு அரைத்து, நரம்புச் சுருட்டலுக்கு மேல் தொடர்ந்து 2 அல்லது 3 வாரங்கள் தடவி வந்தால் வெரிக்கோஸ் பிரச்சினையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்

3.இந்த வெரிக்கோஸ் நோயால் அவதிப்படுவோர் அத்திக்காயில் வரும் பாலை நரம்புச் சுருட்டல்களுக்கு மேல் தடவி, 3 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் வெரிகோஸ் பிரச்சினை நிரந்தரமாக ஓடி விடும்

இந்த வெரிக்கோஸ் நோயால் அவதிப்படுவோர் நீண்ட நேரம் நடப்பதையும், உட்காருவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இறுக்கமான ஆடைகள் அணிவதையும், ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதையும் பெண்கள் தவிர்த்தால் வெரிகோஸ் உங்களை தாக்காது