உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால் என்ன நன்மை தெரியுமா ?

 
dry grapes dry grapes

பொதுவாக உலர்திராட்சையை சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆரோக்கியம் பிறக்கும் .இந்த உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த உலர்திராட்சையை சாப்பிட்டால் நாம் அடையும் பயன்கள் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம் 

1.பெண்கள் உலர்திராட்சையை தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக்கொண்டால், மாதவிடாய்க் கால வலி நீங்கும். 
2.இரும்புச்சத்து இதில் அதிகம் உள்ளதால், தினமும் உலர்திராட்சையை சிறிதளவு சாப்பிடுபவர்களின் உடல் எடை வெகு விரைவில் அதிகரிக்கும்.
3.வெயில் காலம் தொடங்கிவிட்டால், சிலருக்கு முகத்தில் கொப்புளங்கள் வரும். அவர்கள் இதைச் சாப்பிட்டால், கொப்பளங்கள், கட்டிகள் நீங்கி ஆரோக்கியம் பிறக்கும்  
4.உலர்திராட்சையில்  வைட்டமின் ஏ சத்து இருப்பதால், கண்களுக்கு நல்ல பலன்களைத் தரும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், பார்வைக்குறைபாடு நீங்கும்; 
5.உலர்திராட்சையில் பொட்டாசியம் சத்தும் அதிகமாக இருக்கிறது.  இதயத் துடிப்பை சீராக வைத்திருப்பதற்கு பொட்டாசியம் சத்து தேவை. 
6.உலர்திராட்சையை சாப்பிடுவதால், நம் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் பொட்டாசியம் சத்து பரவும்; நல்ல பலன் தரும்.
7.மேலும் சர்க்கரை நோயாளிகளும் உலர்திராட்சையை தாராளமாகச் சாப்பிடலாம். 
8.மேலும் உலர்திராட்சையில்  நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவக்கூடியது.
9.உலர்திராட்சையை சாப்பிட்டால் தோல் நோய்களில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ள முடியும்; முகமும் பொலிவு பெறும்.
10.உலர்திராட்சையை சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும். ரத்தசோகை போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.