தொப்பையைக் குறைக்க எளிய சிகிச்சை என்ன தெரியுமா ?

 
fat fat

பொதுவாக இன்று பலரும் உட்கார்ந்த இடத்திலிருந்தே வேலை பார்ப்பதால் தொப்பை வயிறு வருவது பெரும் பிரச்சினையாக உள்ளது .இந்த தொப்பையை குறைக்க பல இயற்கையான வழி முறைகள் உள்ளது .இது பற்றி நாம் இந்த பதிவில் காணலாம் 

1.தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடிக்கவேண்டும்.
2.தொப்பையைக் குறைக்க தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடல் எடையை குறைக்கும்.
3.தொப்பையைக் குறைக்க இஞ்சி உதவும் .இது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரைய செய்யும்.
4.தொப்பையைக் குறைக்க உதவும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.
5.தொப்பையைக் குறைக்க உதவும் கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
6.தொப்பையைக் குறைக்க உதவும் பச்சை பட்டாணியின் மூலமாக உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கலாம். 
7.இந்த பச்சை பட்டாணி உடலில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைத்து, இரத்தத்தில் உள்ள நல்ல கொழுப்புச்சத்தை அதிகரிக்கும்.
8. அடுத்து சக்கரவள்ளிக்கிழங்கு இதில் மிகக் குறைந்த அளவிலான கொழுப்பே உள்ளது. 
9.அதோடு இது செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அதிக நேரம் நீங்கள் எனர்ஜியுடன் இருக்க முடியும்.
10.புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது என்பதால் தொப்பை குறைக்க உதவும்