• October
    20
    Sunday

Main Area

Main



தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை; அரசானை வெளியிட்டது தமிழக அரசு!

கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தை பொறுத்தவரை மக்களவை தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது.

vote

இதையொட்டி, அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடனும், அதன் மீதான பரிசீலனை இன்றும் முடிவடைந்தது.

tamilandu secretariat

இந்நிலையில், மக்களவை மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.

இதையும் வாசிங்க

ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணத்தை வாரி இறைக்கும் கனிமொழி, வைரலாகும் வீடியோ - அதிமுக புகார்

2018 TopTamilNews. All rights reserved.