• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘மாரி 2’ டிரைலர்!

maari2

சென்னை: தனுஷ் நடித்துள்ள ‘மாரி 2’ படத்தின் டிரைலர் ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

‘மாரி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான ‘மாரி 2’ திரைப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் டிச.21ம் தேதி ரிலீசாகவுள்ளது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, அறந்தாங்கி நிஷா, வித்யா பிரதீப், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ‘ரவுடி பேபி’ பாடல் ரிலீசாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் டிரைலர் கடந்த டிச.4ம் தேதி யூடியூபில் வெளியானது. மாரி 2 டிரைலர் வெளியாகி ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அபார சாதனை படைத்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி ஸ்டைலில் இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

             
2018 TopTamilNews. All rights reserved.