• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

புனே தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கும் டான்சிங் திவா மாதுரி தீட்சித்?

madhuridixit

மும்பை: மக்களவை தேர்தலில் புனே தொகுதிக்கான பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை மாதீரி தீட்சித்தை அக்கட்சி நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இது தவிர பாஜக-வை வீழ்த்தும் நோக்கில் மூன்றாவது அணியும் தயாராகி வருகிறது.

சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் என பிரபலமானவர்களை களம் இறங்கி அதிக தொகுதிகளை கைபற்றும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. அந்த வகையில், மக்களவை தேர்தலில் புனே தொகுதிக்கான பாஜக வேட்பாளராக பாலிவுட் நடிகை மாதீரி தீட்சித்தை அக்கட்சி நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தேர்தலில் புனே தொகுதியை காங்கிரஸிடம் இருந்து பாஜக கைபற்றியது. அங்கு பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இருப்பினும் செல்வாக்கு மிக்க நபர்களை நிற்க வைப்பதன் மூலம் அதிகமான வாக்குகளை பெற முடியும் என்பதால் அக்கட்சி மாதீரி தீட்சித்தை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

             
2018 TopTamilNews. All rights reserved.