• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக பிரபல நடிகையை களமிறக்கும் பாஜக?

madhuri

மும்பை: நாடாளுமன்ற தேர்தலில் புனே மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக இந்தி நடிகை மாதுரி தீட்சித் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என தெரிகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முழு வீச்சில் இறங்கியுள்ளது. அதேசமயம் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸூம் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.

madhuri

இதனால் சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மூலம் பிரச்சாரத்தில் களமிறங்க பாஜக திட்டம் தீட்டியுள்ளது. அதனால் சச்சின்  டெண்டுல்கர், மலையாள நடிகர் மோகன்லால் உட்பட பலரையும் பாஜகவினர் சந்தித்ததாகக் கூறப்படுகிறது.

maduri

அந்த வகையில் மக்களவை தேர்தலில் புனே தொகுதியில் மாதுரி தீட்சித் களமிறக்க பாஜக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதன் காரணமாக தான்  நடிகை மாதுரி தீட்சித்தை மும்பையில் அமித் ஷா சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார் என்று பாஜக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

குஜராத் முதல்வராக மோடி பதவியேற்ற முதல் தேர்தலில் பிரபலங்களை நிறுத்தியதன் மூலம் அதிக தொகுதிகளை பாஜக கைபற்றியது. வரும் மக்களவை தேர்தலிலும் அதே பாணியை பின்பற்ற முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலில் புனே தொகுதியை காங்கிரஸிடம் இருந்து பாஜக கைபற்றியது. அங்கு பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. இருப்பினும் செல்வாக்கு மிக்க நபர்களை நிற்க வைப்பதன் மூலம் அதிகமான வாக்குகளை பெற முடியும் என்ற நோக்குடன் நடிகை மாதுரி தீட்சித்தை களமிறக்க முடிவு செய்துள்ளனர்  என்ற கருத்தும் பரவலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

             
2018 TopTamilNews. All rights reserved.