• July
    18
    Thursday

Main Area

Main



மலேசிய காமரஜர் ‘துன் சம்பந்தன்’ நினைவு தினம் இன்று!

துன் சம்பந்தன்
துன் சம்பந்தன்
Loading...

பேராக் மாநிலத்தின் சுங்கை சிட்புட் நகரில் வீராசாமி செல்லம்மாள் மகனாக பிறந்தவர் திருஞான சம்பந்தன். அவர் மலேசிய காங்கிரஸ் தலைவராக இருந்து ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் சேவையாற்றி இருக்கிறார். 

tun sambathan

மலேசியா சுதந்திரமடைந்தபோது மலேசிய இந்திய மக்களின் சார்பாக இங்கிலாந்து அரசு பேச்சு வார்த்தை நடத்த இவரைத்தான் அழைத்தது. அவருக்கு மலேசிய அரசு மிக உயரிய விருதான துன் ( Tun ) விருதளித்து கவுரவித்தது. 

தன்னலமற்ற உழைப்பும் நேர்மையும்தான் மலேசிய மக்களின் நினைவில் சம்பந்தனை நிறுத்தி வைத்திருக்கிறது.சம்பந்தனின் தந்தை வீராசாமி 19-ம் நூற்றாண்டில் மலேயாவுக்கு வந்தவர்,சம்பந்தன் கல்லூரி படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு நாடு திரும்பியபோது மகனை தன் நிறுவனத்தில் உக்கார வைத்து அழகுபார்த்தவர்.

tun sambhathan

ஆனால் சம்பந்தனுக்கு மலேசிய விடுதலைப் போராட்டம்தான் விருப்பமானதாக இருந்தது.1954-ல் சுங்கை சிட்புட்டில் மகாத்மா காந்தி தமிழ் பள்ளியை நிறுவினார்.அதை திறந்து வைத்தவர் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்.அதோடு,1960-ல் மலாயன் டைம்ஸ் என்ற ஆங்கில பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்.அதை லாபமே இல்லாமல் நடத்திவந்தார்.இதுபோன்ற பொதுச்சேவைகளால் தந்தை சேர்த்த செல்வம் கரைந்தது.

ஆனால் அவரது சேவைக்கான விருதுகள் வந்தபடி இருந்தன வரிசையாய்.
1966-ல் டான்ஸ்ரீ விருது.அடுத்த ஆண்டே துன் விருது,1971-ல் மலாயா பல்கலையின் டாக்டர் பட்டம்,என்று நிறைவான வாழ்க்கை வாழ்ந்த சம்பந்தன் 1979-ம் ஆண்டு இதே போன்றதொரு மே 18-ம் தேதி மறைந்தார்.

tun v.t.s

அவர் நினைவாக கோலாலம்பூரிலும் ,ஈப்போவிலும் இரண்டு முக்கிய சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.கோலாலம்பூர் துன் சம்பந்தன் சாலையிலுள்ள அதிவிரைவு ரயில் நிலையத்துக்கும் எல்.ஆர்.டி துன் சம்பந்தன் என்றுதான் பெயரிட்டிருக்கிறார்கள்.

மலேசிய சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றுவிட்ட சம்பந்தனை மலேயா மக்கள் ' மலேசிய காமராஜர்' என்று அழைப்பதற்கு அவர் நிறம்மட்டும் காரணமில்லை.

2018 TopTamilNews. All rights reserved.