• July
    19
    Friday

Main Area

Main



மாமனாரை விருந்துக்கு அழைத்து துப்பாக்கியால் சுட்ட மருமகன்: பின்னணி என்ன?

விருந்து
விருந்து
Loading...

உத்தரகாண்ட்: மாமனாரை விருந்து வீட்டுக்கு அழைத்து துப்பாக்கியால் சுட்ட மருமகன் போலீசாரால்  கைது செய்யப்பட்டார். 

உத்தரகாண்ட்டின் சுல்தான்பூர்பட்டியைச் சேர்ந்தவர்  ரயீஸ் அகமது. இவரின்  மகள் ருஹ்ஷர். ருஹ்ஷருக்கும்  அதே பகுதியைச் சேர்ந்த இக்ரமுக்கும்  அண்மையில் திருமணம் நடந்தது.  இதையடுத்து வரதட்சணை பிரச்சனையால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

gun

இதுகுறித்து தனது தந்தையிடம்  ருஹ்ஷர் கூறியுள்ளார். இதனால் கிராம பஞ்சாயத்து கூட்டி மணமக்கள் தனிக்குடித்தனம் செல்லுமாறு கூறி முடிவெடுத்துள்ளனர்.  இதில் இக்ரமுக்கு உடன்பாடில்லை எனத் தெரிகிறது. இருப்பினும் தனிக்குடித்தனம் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து மாமனாரை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார் இக்ரம். மருமகன் அன்புடன் அழைக்கிறாரே  என்று  ரயீஸ் அகமது சென்றுள்ளார்.அங்கு மீண்டும் வரதட்சணை குறித்து பேச்சு ஆரம்பிக்க, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இக்ரம் மாமனாரை தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு திடீரென்று சுட்டுள்ளார்.

shoot

இதையடுத்து இக்ரம் போலீஸுக்கு தாமாகவே போன் செய்து, தன் மாமனாரை சுட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் இக்ரமை  கைது செய்தனர்.  ரயீஸ் அகமது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வரதட்சணையால் நடந்த இந்த விபரீதம் இரு வீட்டார் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

2018 TopTamilNews. All rights reserved.