ஸ்டாலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு : விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் கைது!

ஸ்டாலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு : விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் கைது!

சட்டப்பேரவை நடக்கும் கலைவாணர் அரங்கம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சிலை தயாரிப்பாளர்கள்
கைது செய்யப்பட்டனர்.

ஸ்டாலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு : விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் கைது!

பொது இடங்களில் விநாயகர் ஊர்வலங்களுக்கு தடை என்ற தமிழக அரசு உத்தரவுக்கு எதிராக சிலை தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தினர். சட்டப்பேரவை நடக்கும் கலைவாணர் அரங்கம் அருகே சிலைகளுடன் சாலைமறியலில் அவர்கள் ஈடுபட்டனர்.இந்நிலையில் விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கும், விழாவை உரிய கட்டுப்பாட்டுடன் நடத்தவும் அனுமதி வழங்கக் கோரி கலைவாணர் அரங்கம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊரடங்கு தடையை மீறி கூட்டத்தை கூட்டுவது, உயிருக்கு ஆபத்தான நிலையில் நோய் பரப்புதல் உள்ளிட்ட காரணங்களால் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு : விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் கைது!

தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை பொது இடத்தில் வைப்பதற்கும், நீரில் கரைப்பதற்கும் தடை விதித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தனிநபர்கள் தங்கள் வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு இந்து முன்னணி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.