• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

மரோடானா எங்கள் நாட்டில் மிகவும் பிரபலம்: அர்ஜென்டினாவில் பிரதமர் மோடி பேச்சு

narendra modi

பியூனஸ் அயர்ஸ் (அர்ஜென்டினா): கால்பந்தாட்ட வீரர் மரோடானாவின் பெயர் எங்கள் நாட்டில் மிகவும் பிரபலம் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பியூனஸ் அயர்ஸ் நகருக்கு வந்துள்ளார். ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரெஸ், சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசிய மோடி, ‘அமைதிக்காக யோகா’ என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ஏராளமான இந்தியர்களும், அர்ஜென்டினா நாட்டவர்களும் பங்கேற்று யோகாசனத்தில் ஈடுபட்டனர்.

இதன் பிறகு பேசிய அவர், இந்தியாவின் பழமை வாய்ந்த சிறப்புக்குரிய யோகாசனம் கலை அர்ஜென்டினாவையும் இந்தியாவையும் இணைக்கிறது.இந்தியாவின் கலைகள், இசை மற்றும் நடனம் ஆகியவை அர்ஜென்டினா நாட்டு மக்களை ஈர்த்துள்ளதுபோல், உங்கள் நாட்டு கால்பந்தாட்ட வீரர்களுக்கு இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, மாரடோனாவின் பெயர் எங்கள் நாட்டில் மிகவும் பிரபலம். ஆரோக்கியம், நலம் மற்றும் அமைதிக்காக இந்தியா இந்த உலகத்துக்கு அளித்த பரிசு யோகாசனம். இந்தியாவுக்கும் அர்ஜென்டினாவுக்கு இடையிலான மிகநீண்ட தூரத்தை யோகாசனம் கலை இணைத்துள்ளது என்றார்.

             
2018 TopTamilNews. All rights reserved.