• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் சக்திமாலை,இருமுடி விழா தொடக்கம் 

melmaruvathur

விழுப்புரம்:

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை முன்னிருத்தி கார்த்திகை மாதம் சக்தி மாலை அணிந்து இருமுடி எடுத்து சென்று அம்மனை வழிபாடு செய்வது வழக்கம் . அதே போல் இந்தாண்டிற்கான சக்தி மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது . 

melmaruvathur

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச ஜோதி விழாவுக்கு முன்பாக கார்த்திகை மாதம் தொடங்கி சக்தி மாலை அணிந்து, அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வந்தனர்.

இந்த ஆண்டிற்கான இருமுடி விழா நேற்று தொடங்கி ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை நடைபெறுகிறது. இருமுடி விழா நேற்று அதிகாலை மங்கள இசையுடன் தொடங்கி காலை 5.45 மணிக்கு கருவறை மண்டபத்தில் இயற்கை வழிபாடு நடைபெற்றது. 

melmaruvathur

அதனையடுத்து இருமுடி அபிஷேகத்தை லட்சுமி பங்காரு அடிகளார் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் முதலில் 9 சிறுமிகளும், 9 தம்பதிகளும் அம்மனை அபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து மற்ற பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

melmaruvathur

இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 21 ஆம் தேதி வரை ஆன்மிக குரு பங்காரு அடிகளார் ஏற்றும் தைப்பூச ஜோதி விழா விமர்சையாக நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக  மக்கள் இயக்கத்தினரும் மற்றும் பல்வேறு குழுவினர்களும் இணைந்து செய்திருந்தனர்.

             
2018 TopTamilNews. All rights reserved.