• July
    17
    Wednesday

Main Area

Main



கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் கதறல்...’அவன் என் மகன் அல்ல’...

 சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
Loading...

'வலைதளங்களில் கையில் மாவுக்கட்டுடன் வைரலாகப் பகிரப்படும் குடிகாரக் குற்றவாளி என் மகன் அல்ல. அவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என அமைச்சர் சிவி.சண்முகம் கமிஷனர் அலுவலகத்தில் கதறல் புகார் அளித்தார்.

சென்னை திருவான்மியூரில் இருந்து சொகுசு கார் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு கிழக்கு கடற்கரை சாலையில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. நீலாங்கரை அருகே வந்த போது, கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து எதிரே சென்ற ஆட்டோவை அப்பளமாக நொறுக்கியது .. வேகத்தின் காரணமாக கார் நிற்காமல் சாலையோரம் இருந்த ஜூஸ் மற்றும் இளநீர் கடைகளுக்குள் புகுந்து சுற்று சுவரில் மோதி நின்றது.

navin

இந்த காரில் இருந்த வாலிபர் நவீன் தள்ளாடியபடி வெளியே வந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த வாலிபர் காவலர்களை மிகவும் ஆபாசமாக பேசியும், காவலர்கள் என்றும் பாராமல் சீருடையை பிடித்து இழுத்தும் கன்னத்தில் அறைந்தும் தகராறில் ஈடுபட்டார். 

 அந்த இளைஞரின் குடிப்பான செயல் வலைதளங்களில் வைரலானது. குடிபோதையில் ஆபாசமாக திட்டிய நவீன் என்பவர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலானது. அதே இளைஞர் இன்று கையில் பெரிய கட்டுடன் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்த அடிப்பட்ட படங்களும் வைரலாக ‘பரவாயில்லையே மினிஸ்டர் பையன்னு கூட பாக்காம வச்சி செஞ்சிட்டாங்களே’என்ற கமெண்டுகளும் பறந்தன.ஆனால் உண்மையில் அவர் அமைச்சரின் மகன் அல்ல.மதுரையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் மகன் என்ற செய்தி பின்னர்தான் ஊர்ஜிதமானது.

c v shanmugham

இந்நிலையில் தானும் தனது மகனும் வலைதளங்களில் தொடர்ந்து அவமானப்படுத்தப்படுவது கண்டு கொதித்த அமைச்சர் சண்முகம் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து தப்பா எழுதுறவங்களை எல்லாம் புடிச்சு உள்ள போடுங்க சார்’ என்று புகார் கொடுத்தார்.அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.