தேர்தலின் போது அதிமுக தலைமையில் தான் கூட்டணி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

தேர்தலின் போது அதிமுக தலைமையில் தான் கூட்டணி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வருவதால், கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. அதே போல தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் தயாராகி வருகிறது. வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என்றும் ஜனவரி மாதம் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவில் கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகள் எழுந்து வருகின்றன. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தணித்து நிற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புவதாக கூறினார். அதனால் வரும் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்காதா என கேள்வி எழுந்தது.

தேர்தலின் போது அதிமுக தலைமையில் தான் கூட்டணி: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அதே போல, விநாயகர் சிலை விவகாரம், இ பாஸ் உள்ளிட்ட பல பிரச்னைகளில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல், அதிமுக பாஜக கூட்டணியில் பாஜக தான் தலைமை வகிக்கும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து இன்று திருவாரூரில் பேசிய முதல்வர் பழனிசாமி, தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் தேர்தலின் போது முடிவு செய்யப்படும் என்றும் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என கூறினார்.