• July
    22
    Monday

Main Area

Main



சந்நியாசி ஆகவே விரும்பினேன்’-மோடி...’மே 23க்கு அப்புறம் கண்டிப்பா ஆயிடலாம் சுவாமி’-நெட்டிசன்ஸ்...

மோடி-அக்‌ஷ்ய் குமார்
மோடி-அக்‌ஷ்ய் குமார்
Loading...

’நான் அரசியலுக்கு வரவோ பிரதமராகவோ ஆசைப்பட்டதில்லை. சன்னியாசி ஆகவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது’ என்று பிரதமர் மோடி அளித்த பேட்டிக்கு ’மே 23க்கு அப்புறம் உங்க விருப்பம் கண்டிப்பா நிறைவேறும் சுவாமி’ என்று வலைதளங்களில் மக்கள் நக்கலடித்து வருகிறார்கள்.

தேர்தல் பிரச்சார உத்திகளில் ஒன்றாக டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் பகுதியில் பிரதமர் மோடி,  பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு இன்று காலை பிரத்யேகமாக பேட்டி அளித்தார். இதில் அக்‌ஷய் குமாரின் பல்வேறு அரசியல் அல்லாத தனிப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி கூலாகவும், சுவையாகவும் பதிலளித்தார். 

modi

அப்பேட்டியில்,’எதிர்கட்சிகளில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். மம்தா பானர்ஜி ஒவ்வொரு ஆண்டும் 2 குர்தாக்கள் எனக்கு அனுப்புகிறார்.இதேப்போல்  ஷேக் ஹசீனா எனக்கு இனிப்புகள் அனுப்புவார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எனக்கு மிக நெருங்கிய நண்பராவார். என் உடல் நலன் குறித்த கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பார். 

நான் ஒருபோதும் பிரதமராவேன் என நினைத்ததில்லை.  ஏனென்றால் நான் மிகப்பெரிய அரசியல் பின்னணியுடன் வரவில்லை. சிறந்த சன்னியாசியாகவே ஆசைப்பட்டேன். மேலும் நான் அனைவரிடமும் மரியாதையாகவும், கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளும் தன்மையோடும் தான் இருப்பேன். 

modi

என்னிடம் பணிப்புரியும் யாரிடமும் நான் கோபத்தை காட்டியதில்லை. எனது கோபத்தினை காட்ட வாய்ப்பே கிடைத்ததில்லை. எனவே மக்கள் என்னை கண்டு  ஆச்சரியமடைகின்றனர். நான் கட்டுப்பாட்டுடன் இருப்பேன். ஆனால் அதிக கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.  நான் முதல்வரானபோது செய்த பணிகளில் எனக்கு கிடைத்த அனுபவம் தான்,  பிரதமரான போது பெரிதும் உதவியது.  நான் முதல்வர் ஆவதற்கு முன்பு வரை என்னிடம் வங்கிக்கணக்கே கிடையாது. நான் குடும்பத்தை விட்டு இளம் வயதிலேயே வெளியேறிவிட்டேன்’ என்று செம இமேஜ் பில்ட் அப் செய்திருந்தார்.

இப்பேட்டியின் சந்நியாசி சமாச்சாரத்தை வெகுவாக ரசிக்கும் பொதுமக்கள்’ கவலைப்படாதீங்க மோதிஜி. மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த உடனே உங்க விருப்பம் தன்னால நிறைவேறும்’ என்று மனதார ஆசிர்வதித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: கவுதம் காம்பீர் போட்டியிடும் தொகுதி இதுதான்: பாஜக அறிவிப்பு!
 

2018 TopTamilNews. All rights reserved.