மொயின் அலியை தட்டித்தூக்கிய சிஎஸ்கே!
Feb 18, 2021, 16:02 IST1613644339000
மொயின் அலியின் ஆரம்ப விலை ரூ.2 கோடியாக இருந்தது. அவரை வாங்க பஞ்சாப்புடன் சிஎஸ்கே மல்லுக்கட்டியது. இறுதியில் ரூ.7 கோடிக்கு சிஎஸ்கே அணி மொயின் அலியை ஏலத்தில் எடுத்தது.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் மொயின் அலி ஆர்சிபி அணிக்காக ஆடியிருக்கிறார். ஆர்சிபி அணி அவரை எடுக்க பெரிதும் ஆர்வம் காட்டவில்லை. ஏலம் நடைபெறுவதற்கு முன்பே நெஹ்ரா, தோனியின் சாய்ஸாக மொயின் அலி இருப்பார் என கருத்து கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே சிஎஸ்கே கட்டம் கட்டி மொயின் அலியைத் தட்டித்தூக்கியது. பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துபவர் அலி. இதனால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.