• July
    19
    Friday

Main Area

Main



4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தை: மின்னல் வேகத்தில் காப்பாற்றிய தாய்; பதற வைக்கும் சிசிடிவி காட்சி!

சிசிடிவி
சிசிடிவி
Loading...

கொலம்பியா: தாயுடன் வந்த குழந்தை 4 -வது மாடியிலிருந்து தவறி விழுந்த  வீடியோ காட்சி வெளியாகி நெஞ்சை பதற வைக்கிறது. 

கொலம்பியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் லார்லெஸ் கொலோனியல் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.  மெடிலின் நகரில் உள்ள இந்த கட்டிடத்தில் லிப்டில் வந்த அந்த பெண் போன் பேசியபடி  4வது  மாடியில் நிற்க , அங்கு நின்று கொண்டிருந்த குழந்தை விளையாட்டாக  பால்கனியை எட்டிப்பார்த்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறி குழந்தை மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளது.

 

இதைச் சற்றும் எதிர்பாராத அக்குழந்தையின் தாயார், மின்னல் வேகத்தில்  தரையில் விழுந்து குழந்தையைப் பிடித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த சிலர் பெண்ணுடன் சேர்ந்து குழந்தையை மீட்டனர்.  இந்த விபத்தில் எந்த காயமுமின்றி குழந்தை உயிர் தப்பியது. இதை கண்ட அங்கிருந்தவர்கள் கைதட்டி தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். இந்த வீடியோவானது  தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.