• June
    19
    Wednesday

Main Area

Main



எவரெஸ்ட்டில் திடீரென 10 பேர் உயிரிழப்பு

everest
everest
Loading...

நேபாள அரசு அளவுக்கு அதிகமான பெர்மிட் வழங்கியதும், எவரெஸ்டில் கடும் நெரிசல் ஏற்பட்டு 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த ராபர்ட் பிஷர் என்பவர் சிகரத்தில் இருந்து இறங்கும்போது நேற்று உயிரிழந்தார். இதேபோல் அயர்லாந்தை சேர்ந்த கெவின் ஹைன்ஸ் என்பவர் சிகரத்தின் அருகே வரிசையில் நின்றபோது பிராணவாயு குறைந்ததால் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இது தவிர கடந்த வாரத்தில் மட்டும் ஒரு பெண் உள்பட நான்கு இந்தியர்கள் எவரெஸ்டில் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளனர்.நேபாள அரசு அளவுக்கு அதிகமான பெர்மிட் வழங்கியதும், இந்த சீசனில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகமாக இருப்பதுமே எவரெஸ்டில் கடும் நெரிசல் ஏற்பட காரணம் என தெரியவந்துள்ளது. ஒரு பெர்மிட்டை நேபாள அரசு 8 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளது. இந்த சீசனில் மட்டும் இதுவரை 380 பேருக்கு பெர்மிட் வழங்கப்பட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.