• July
    21
    Sunday

Main Area

Main



தானாக வந்து மும்பை இளைஞருக்கு வேலை கொடுத்த கூகுள் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மும்பை இளைஞர்
மும்பை இளைஞர்
Loading...

மும்பையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கூகுள் நிறுவனம் தானாக முன் வந்து ஆண்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் சம்பளத்தில் வேலை வழங்கியுள்ளது.

இணையம் மூலம் தேர்வுகள் 

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரைச் சேர்ந்தவர் அப்துல்லா கான் (21), ஸ்ரீ எல்ஆர் திவாரி பொறியியல் கல்லூரியில் தனது பி.இ- கணினி பொறியியல் படிப்பைப் படித்த அப்துல்லாவிற்கு தான் கூகுள் நிறுவனம் தானாக முன் வந்து நேர்காணல் நடத்தி பணி நியமன ஆணை வழங்கியுள்ளது.

அப்துல்லா கான்

சமீபத்தில் இணைய புரோகிராமிங் சேலஞ் ஒன்றின் மூலம் அப்துல்லாவின் விபரங்களை எதேச்சையாகப் பார்வையிட்ட கூகுள் நிறுவனம், உடனடியாக நேர்காணலில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தது. அந்நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட இணையத்  தேர்வுகளை எதிர்கொண்ட அவர், இறுதி தேர்வுக்காக லண்டன் சென்றார்.

ஐஐடி நுழைவுத் தேர்வில் தோல்வி 

லண்டனில் நடைபெற்ற இறுதித் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட அப்துல்லாவை, வருகிற செப்டம்பர் மாதம் லண்டன் அலுவலகத்தில் வேலையில் சேருமாறு பணி நியமன ஆணை வழங்கிய கூகுள் நிறுவனம், அவருக்கு ஆண்டு சம்பள தொகையாக ஒரு கோடியே 20 லட்சத்தை அறிவித்துள்ளது.

கூகுள்

அப்துல்லா ஐஐடி கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெறாததால் வேறு கல்லூரியில் பொறியியல் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக ஐஐடி மாணவர்களையே குறி வைக்கும் கூகுள் நிறுவனம் வேறு கல்லூரியை சேர்ந்தவரை தானாக நேர்காணல் செய்து பணி வழங்கியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க 

தானாக வந்து மும்பை இளைஞருக்கு வேலை கொடுத்த கூகுள் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?

2018 TopTamilNews. All rights reserved.