• July
    21
    Sunday

Main Area

Main



வரும் 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார் மோடி

modi
modi
Loading...

வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 

மக்களவை தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மத்தியில் ஆட்சியமைக்க வரும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்தார்.  இதையடுத்து அவரே மோடிக்கு பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். டெல்லி ரெய்சினா ஹில்ஸ் பகுதியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை வரும் 30-ம் தேதி மாலை 7 மணிக்கு பதவியேற்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.