• July
    17
    Wednesday

Main Area

Main



ஜெயம் ரவியோட அக்கா- நயன்தாரா! அஹ்ஹக்கா! பொன்னியின் செல்வன் லேட்டஸ்ட் அப்டேட்!?

நயன்தாரா
நயன்தாரா
Loading...

சென்னை: எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை எம்.ஜி.ஆர் தொடங்கி கமலஹாசன் உட்பட படமாக எடுக்க ஆசைப்பட்ட ஆட்களின் எண்ணிக்கை மேற்படி நாவலின் ஐந்து பாகத்துக்கும் சற்றும் குறைவில்லாத நீளம் இருக்கும் வாய்ப்பே அதிகம்.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ஒரு பக்கம் வெப் சீரிஸாக எடுக்க ஆரம்பித்து,அவ்வப்போது அது குறித்த அப்டேட்டுகளை மீடியாக்களுக்கு தட்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்.

 

 ‘பொன்னியின் செல்வன்’ நாவல் 
karthi

 

தற்காலிகமாக நின்ற ப்ராஜெக்ட் 

ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பே ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் இறங்கினார் இயக்குனர் மணிரத்னம்.அந்த நாவலை எழுத்தாளர் ஜெயமோகனிடம் சொல்லி சினிமாவுக்கான ஸ்க்ரிப்ட்டும் ரெடி பண்ணியிருந்த நிலையில் இப்போதைக்கு இந்த ப்ராஜெக்ட் இல்லை என்று சொல்லிவிட்டு வேறு படங்களில் கவனம் செலுத்தினார்.

 

 

aishwarya

அதன் பிறகு,கடந்த நான்கு மாதமாகவே மணிரத்னம் குறித்தும் ‘பொன்னியின் செல்வன்’படத்தில் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்று ஏகப்பட்ட செய்திகள் வெளியானது.ஒருவழியாக அந்தப் படத்தில் நடிக்கப்போகிறவர்கள் யார் என்பதை முடிவு செய்துவிட்டார் மணிரத்னம்.

 

 ‘பொன்னியின் செல்வன்’ மன்னர்கள் யார்?
jayam ravi

அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவி,வந்தியத்தேவனாக சூர்யாவின் தம்பி கார்த்தி,நந்தினியாக ஐஸ்வர்யாராய்,குந்தவையாக நயன்தாரா நால்வரும் நடிக்கிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.பழுவேட்டரையர் கேரக்டருக்கு தெலுங்கு நடிகர் மோகன் பாபுவிடம் கேட்டிருக்கிறார் மணிரத்னம்.அவர் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறாராம்.அவர் இல்லையென்றால் அடுத்த சாய்ஸில் இருப்பவர் சத்யராஜ்.

 

ஜெயம் ரவி அக்காவாக வரும் நயன்தாரா
maniratnam

இப்போ,டைட்டிலுக்கு வருவோம்.’பொன்னியின் செல்வன்’ நாவலைப் படித்தவர்களுக்கு,அதை படித்தவுடனே புரிந்திருக்கும்.நாவலைப் படிக்காதவர்களுக்கு இந்த தகவல்-கதைப்படி அருண்மொழி வர்மனின் அக்கா குந்தவை கேரக்டருக்கும் படத்தில் பெரிய ரோல் இருக்கிறது.இந்தப் படத்தின் கதைப்படி அருண்மொழி வர்மன் ஜெயம் ரவி என்றால்,குந்தவையாக நடிக்கவிருக்கும் நயன்தாராதனே அக்கா! அஹ்ஹக்கா!

2018 TopTamilNews. All rights reserved.