• October
    20
    Sunday

Main Area

Main



நியூசிலாந்து மசூதி தாக்குதல்: நீதிமன்றத்தில் சிரித்து கொண்டிருந்த கொலை குற்றவாளி!?

பிரெண்டன் டாரண்ட்
பிரெண்டன் டாரண்ட்

நியூசிலாந்து: நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் கொலை வழக்கில் கைதான பிரெண்டன் டாரன்ட் தன்  மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். 

நியூசிலாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிறிஸ்ட் சர்ச் என்ற நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம்  தொழுகையின் போது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுமார் 51 பேர் கொல்லப்பட்டனர். இதில் ஐந்து இந்தியர்களும் உயிரிழந்துள்ளதாக நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இதில் பலர் படுகாயம் அடைந்தனர். 

newzealand

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பிரெண்டன் டாரண்ட் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பிரெண்டன் டாரண்ட் மீது 92 குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டன. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. 

new

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் பிரெண்டன் டாரண்ட் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் பேசிய அவர், தன்  மீதான 51 கொலை குற்றத்தையும், கொலை முயற்சி குற்றத்தையும்  மறுத்தார் என்றும் நீதிமன்றத்தில் சிரித்து கொண்டிருந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த முறை மார்ச் மாதம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதும்  பிரெண்டன் சிரித்து கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. இதனால் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, பிரெண்டனுக்கு மனநலத்தில் எந்த பாதிப்பு இல்லை என்று காவல்துறை  தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

newzealand

இது குறித்து கிறிஸ்ட் சர்ச் மசூதி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது, 'அவர் ஒரு  மிருகம்  நீதிமன்றத்தில்  சிரித்தால் தான் தைரியமானவர் என்று நினைப்பார்கள் என்று எண்ணுகிறார். உண்மையில் அவர் ஒரு கோழை' என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.