• July
    21
    Sunday

Main Area

Main



என்னது... ஒரே தியேட்டரில் மட்டுமே என்.ஜி.கே க்கு இவ்வளவு வசூல் வருமா? 

சூர்யா
சூர்யா
Loading...

சென்னை: என்.ஜி.கே படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும்? என்று பிரபல திரையரங்க உரிமையாளர் பதிவு வெளியிட்டுள்ளார்.  

இயக்குநர் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை மையப்படுத்தி உருவாகியுள்ள இதில் சூர்யாவுடன் இணைந்து தேவராஜ், பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி, குரு சோமசுந்தரம், அருள்தாஸ், இளவரசு என்று பலர் நடித்துள்ளனர். 

அதையடுத்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள இத்திரைப்படம் நாளை உலகம் முழுவது வெளியாகவுள்ளது. அதையொட்டி படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்தநிலையில் சென்னையில் உள்ள பிரபல ரோகினி திரையரங்கு உரிமையாளர் ஒரு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் என்.ஜி.கே இந்த வருடத்தில் 4வது படமாக முதல் நாள் வசூலில் எங்கள் திரையரங்கில் 5 டிஜிட்டில் வரும் என இப்போதே தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.