சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் NGK படத்தின் டீஸரை நடிகர் சூர்யாவே வெளியிடவுள்ளதாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் சூர்யா- செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் NGK. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பக்க பட்ட நிலையில் இயக்குநர் செல்வராகவன் உடல் நிலை சரி இல்லாமல் படம் தள்ளி போனது.
பின்பு இப்படத்தின் அப்டேட் விடுமாறு நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வெய்துவந்தனர். அதை ஏத்து அப்படக்குழுவினர் NGK படத்தின் டீஸர் வரும் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது.
#NGKTeaser will be released by our very own #NGK💖 @Suriya_offl 🙏😍😍😍
— DreamWarriorPictures (@DreamWarriorpic) February 12, 2019
போடு தகிட தகிட தகிட 💃🕺💃🕺#NGKTeaserFrom6pmFeb14 #fanmadedesign pic.twitter.com/2jn16Xss1c
இந்நிலையில் NGK படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது, அதில்" இந்த படத்தின் டீஸரை நடிகர் சூர்யா பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியிடுகிறார்" என்று கூறியுள்ளது. ஏற்கனவே இப்படத்திற்காக காத்திருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு இது மேலும் ஒரு ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது.