• February
    18
    Monday

Main Area

Main

நிர்மலா தேவி விவகாரம்: முருகன், கருப்பசாமிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

murugankarupasamy
murugankarupasamy
Loading...

புதுதில்லி: நிர்மலாதேவி விவகாரத்தில் சிறையில் உள்ள முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், நிர்மலா தேவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மை கல்வி துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் முருகன் என்பவரும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி என்பவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதேபோல், நிர்மலா தேவி அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் கிழமை நீதிமன்றம் நிராகரித்ததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி விண்ணப்பித்தனர். ஆனால், சென்னை உயர் நீதிமன்றமும் அவர்களது ஜாமீன் மனுவை நிராகரித்தது.

இதனை எதிர்த்து தங்களுக்கு ஜாமீன் கோரி முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.