• July
    18
    Thursday

Main Area

Main



தூ‌த்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு ஓராண்டாகியும் நீதி கிடைக்கவில்லை!

தூ‌த்துக்குடி துப்பாக்கிச்சூடு
தூ‌த்துக்குடி துப்பாக்கிச்சூடு
Loading...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு இன்றுடன் ஒரு ஆண்‌டு ஆகிறது. ஆனாலும் உயிரிழந்தவர்களுக்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துக்கின்றனர். 

sterlite protest

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‌அமைதியான மு‌றையில் போராட்டத்தை தொடங்கினர். போராட்டத்தின் நூறாவது நாளான 2018‌ மே 22 அன்று மாவட்ட ஆட்சியர்‌ அலுவல‌கம் நோக்கி பேரணியாக சென்ற போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரி‌ழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் நீ‌தி கிடைக்கவில்லை‌ என பாதிக்கப்ப‌ட்டோர் ‌கூறிவரும் நிலையில், அவர்களுக்கு இரங்கல் நிகழ்ச்சி நடத்தக்கூட தமிழ‌க அரசு அனுமதி வழ‌ங்கவில்லை என அரசியல் தலைவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

sterlite protest

தேர்தல், தேர்தல் முடிவுகள் என ஓடிக்கொண்டிருக்கும் அரசியல் வாதிகளுக்கு ஆறாத வடு எங்கு நியாபகம் இருக்கப்போகிறது என்பது பாதிக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிக்கிறது. 13 பேரின் இறப்புக்கு ஆறுதலாக கடந்த ஒரு ஆண்டா‌க ஆலை மூடியிருந்தாலும் கூட, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருப்பது வெ‌ளிப்படையாக தெரிகிறது.  எப்போது ஆலை மீண்டும் திறக்குமோ என்ற அச்சத்திலேயே அப்பகுதி மக்கள் வாழ்ந்துவருகின்றனர். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ‌சிறப்பு சட்டம் இயற்றி ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை. ஆனால் அந்த கோரிக்கை இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது கொல்லப்ப‌ட்ட 13 பேருக்கும் நீதியாக சட்டம் இயற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

2018 TopTamilNews. All rights reserved.