• May
    21
    Tuesday

Main Area

Main



8 ஜிபி ரேம், இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார் கொண்ட ஓப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

oppo
oppo
Loading...

மும்பை: இந்தியாவில் ஓப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஓப்போ ஆர்17 ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதம் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 AMOLED டிஸ்ப்ளே, 91.5% ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

இதில் வழங்கப்பட்டு இருக்கும் இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார் 0.41 நொடிகளில் அன்லாக் செய்து விடும். இந்த ஸ்மார்ட்போன் 0-40% சார்ஜ் செய்ய பத்து நிமிடங்களே எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் சார்ஜ் செய்த 40 நிமிடங்களில் ஸ்மார்ட்போன் 0-100% சார்ஜ் ஆகிவிடும்.

அறிமுக சலுகையாக குறிப்பிட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது 10% கேஷ்பேக் அளிக்கப்படுகிறது. பேடிஎம் மால் முன்பதிவு செய்வோருக்கு ரூ.3000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.4,900 மதிப்புள்ள 3200 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இவை தவிர ரூ.990 மதிப்புள்ள ஒரு முறை ஸ்கிரீன் மாற்றிக் கொள்ளும் வசதி, வட்டியில்லா மாத தவணை முறை வசதி, பழைய ஸ்மார்ட்போனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.2000 வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஓப்போ ஆர்17 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே

- கார்னிங் கொரில்லா கிளாஸ் 6

- ஆக்டா-கோர் ஸ்ன்ப்டிராகன் 710 10 என்.எம். பிராசஸர்

- அட்ரினோ 616 GPU

- 8 ஜி.பி. ரேம்

- 128 ஜி.பி. மெமரி

- டூயல் சிம் ஸ்லாட்

- கலர் ஓ.எஸ். 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1

- 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.5/2.4, OIS

- 20 எம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6, TOF 3D கேமரா

- 25 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, ஏ.ஐ., சோனி IMX576 சென்சார், 3D போர்டிரெயிட்

- இன்-டிஸ்ப்ளே விரல்ரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி

- 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி

இந்த ஸ்மார்ட்போன் ரேடியன்ட் மிஸ்ட் மற்றும் எமரால்டு கிரீன் ஆகிய நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.45,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் இணையதளத்தில் மட்டும் பிரத்யேகமாக முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் விற்பனை டிசம்பர் 7-ஆம் தேதி தொடங்குகிறது.

2018 TopTamilNews. All rights reserved.