Main Area

Main

ஐரோப்பாவில் புதிய ஓப்போ RX17 ப்ரோ, RX17 நியோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

oppo

டெல்லி: புதிய ஓப்போ RX17 ப்ரோ மற்றும் RX17 நியோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஓப்போ RX17 ப்ரோ மற்றும் RX17 நியோ ஸ்மார்ட்போன்கள் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார் மற்றும் நீர்த்துளி வடிவிலான நாட்ச் இடம்பெற்றுள்ளது. கலர் ஓ.எஸ் 5.2 இயங்குதளம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்களில் 25 எம்.பி AI முன்பக்க கேமிரா மற்றும் 6.4 இன்ச் டிஸ்பிளே உள்ளது.

மேலும், RX17 நியோ மாடலை விட RX17 ப்ரோ மாடல் கூடுதல் முக்கிய அம்சங்களை பெற்றுள்ளது. அதாவது RX17 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 710 ப்ராஸசர், 8 ஜிபி ரேம் மற்றும் மூன்று பின்பக்க கேமராக்கள் உள்ளன. அதேசமயம் RX17 நியோவில் ஸ்னாப்டிராகன் 660 ப்ராஸசர், 4 ஜிபி ரேம் மற்றும் இரட்டை பின்பக்க கேமராக்களை கொண்டுள்ளது.

oppo2

ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஓப்போ R17 ப்ரோ மற்றும் ஓப்போ R17 நியோ மாடல்களில் சில மாறுதல்கள் செய்யப்பட்டு இவ்விரு புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன்களில் கொரில்லா 6 பாதுகாப்பு கண்ணாடி இடம்பெற்றுள்ளது. மேலும், 40 சதவீத பேட்டரி சார்ஜ் ஆக வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓப்போ RX17 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் எச்.டி டிஸ்பிளே

- ஸ்னாப்டிராகன் 710 ப்ராஸசர்

- 6 ஜிபி ரேம்

- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கலர் ஓ.எஸ் 5.2 இயங்குதளம்

- 12 எம்.பி மற்றும் 20 எம்.பி மூன்று பின்பக்க கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 25 எம்.பி செல்ஃபி கேமரா

- டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்

- 3700 எம்.ஏ.எச் பேட்டரி

ஓப்போ RX17 நியோ சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் எச்.டி டிஸ்பிளே

- ஸ்னாப்டிராகன் 660 ப்ராஸசர்

- 4 ஜிபி ரேம்

- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி

- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ கலர் ஓ.எஸ் 5.2 இயங்குதளம்

- 16 எம்.பி + 2 எம்.பி இரட்டை பின்பக்க கேமரா, எல்இடி ஃபிளாஷ்

- 25 எம்.பி செல்ஃபி கேமரா

- டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்பிளே விரல்ரேகை சென்சார்

- டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்

- 3700 எம்.ஏ.எச் பேட்டரி

oppo3

ஓப்போ RX17 ப்ரோ விலை இந்திய மதிப்பில் தோராயமாக 49,800 ரூபாய் என்றும் ஓப்போ RX17 நியோ விலை ரூ.29,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓப்போ RX17 ப்ரோ மாடல் ரேடியண்ட் மிஸ்ட் மற்றும் எமரால்ட் கிரீன் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

RX17 நியோ மாடல் மோட்சோ ரெட் மற்றும் அஸ்ட்ரல் ப்ளூ நிறங்களில் கிடைக்கிறது. இவ்விரு ஸ்மார்ட்போன்களும் வருகிற நவ.16-ஆம் தேதியிலிருந்து இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தில் வெளியாகிறது.

2018 TopTamilNews. All rights reserved.