• 12
    புதன்
  • 12
    டிசம்பர்

Main Area

Main

பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை

pancard

டெல்லி: பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளளார்.

நிரந்தர கணக்கு எண் அல்லது பான் கார்டு என்பது வரி செலுத்துவோருக்கு வருமான வரி துறையினர் அளிக்கும் 10 இலக்க எண் ஆகும். பான் கார்டினை அடையாள அட்டையாகவும் பயன்படுத்தலாம். தற்போது பான் கார்டுக்கு விண்ணப்பித்து அதனை வாங்குவதற்கு சுமார் 10 நாட்களுக்கும் மேலாக ஆகிறது.

இந்நிலையில், பான் கார்டுக்கு விண்ணப்பித்த 4 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் சுசில் சந்திரா தெரிவித்துள்ளளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், வரிகளை முன்கூட்டியே செலுத்துதல், வருமான வரித் தாக்கல், பணத்தை திரும்ப பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தானியங்கி மயமாக்கல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.

வருமான வரித்துறையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தபட்டு வருகிறது.  வருமான வரித் தாக்கலுக்கான விண்ணப்பங்களும், பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடைமுறைகளும் எளிமைப்படுத்தப்படும் என்றார்.

மேலும், 2018 - 19-ஆம் நிதிண்டில் வருமான வரித் தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து 6 கோடியே 8 லட்சத்தைக் கடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

             
2018 TopTamilNews. All rights reserved.