• July
    17
    Wednesday

Main Area

Main



சாதி பெயரை சொல்லி மாணவியை திட்டிய தலைமை ஆசிரியர்!

students
students
Loading...

கோவை அருகே 5 ஆம் வகுப்பு மாணவியை சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அடித்ததாகவும் அரசுப்பள்ளி தலைமையாசிரியை மீது பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை அடுத்த கரட்டுமேடு கந்தசாமி நகரில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் பயிலும் 5ஆம் வகுப்பு மாணவி உடல்நலக்குறைவு காரணமாக வகுப்பறையிலேயே வாந்தி எடுத்துள்ளார். இதற்காக அந்த மாணவியை தலைமை ஆசிரியர் ஜெயந்தி அடித்ததாகவும், சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்திலும், வட்டார கல்வி அதிகாரியிடமும் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2018 TopTamilNews. All rights reserved.