• July
    20
    Saturday

Main Area

Main



ஏய் நீ வா, நில்லு, ஓடு, அடுத்து நீ வா நில்லு, ஓடு.....உதயநிதிக்கு இம்புட்டு அலும்பா?

Udayanidhi Stalin
Udayanidhi Stalin
Loading...

உதய நிதிக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்தாலும் கொடுத்தார்கள், உ.பிக்களின் ஆர்வத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. உதயநிதிக்கு வாழ்த்து சொல்கிற சாக்கில் போட்டோ ஒன்றைப்பிடித்து காரிலோ, வீட்டின் முன் அறையிலோ மாட்டி வைத்துவிட்டால் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து சீட் கேட்கும்போது பிரயோசனமாக இருக்கும் என்று நினைத்தவர்கள், அந்த ஒரு போட்டோவுக்காக எவ்வளவு கீழே போகிறார்கள் பாருங்கள். 
நாற்பதாண்டுகள் கழித்து நீரிலிருந்து மேலெழும்பி வந்த அத்திவரதரை தரிசிக்க வந்த கூட்டத்தை கட்டுப்படுத்துபவர்கள்கூட அவ்வ‌ளவு வேகமாக செயல்பட மாட்டார்கள்.

Udayanidhi

உதயநிதி மேடையில் இருக்கிறார், கூடவே நிர்வாகிகளும் பின்னாலேயே நிற்கிறார்கள். வாழ்த்து சொல்ல வருகிற தொண்டர்கள், சால்வை போர்த்த வருகிறவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நொடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்தை அளிக்கிறார்கள். போட்டோ எடுக்கணுமே, ரெடி, ஸ்டெடி, ஸ்மைல் சொல்வதற்கெல்லாம் நேரமெங்கே? நில்லு, நீ வா, ஓடு, அடுத்த ஆளு வா, நில்லு, ஓடு என வெரட்டி வெரட்டி போட்டொ எடுத்ததை பார்த்த பத்ரிகையாளர் ஒருவர் அடித்த கமென்ட்தான் டாப்.

 

திமுக தலைவராக இருந்த கலைஞருக்கே இவ்வளவு சீன் எல்லாம் இல்லையே, இதெல்லாம் நல்லதுக்கில்லை என்றாரே பார்க்கலாம்.
 

 

2018 TopTamilNews. All rights reserved.