• May
    21
    Tuesday

Main Area

Main



அட எனக்கு பன்றிக்காய்ச்சல் இல்லப்பா..: ‘பருத்திவீரன்’ நடிகர் விளக்கம்!

saravanan
saravanan
Loading...

சென்னை: பிரபல குணச்சித்திர நடிகர் சரவணனுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் கார்த்தியின்பருத்துவீரன்திரைப்படத்தில் கார்த்திக்கு சித்தப்பா வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் சரவணன். தன் இயல்பான நடிப்பின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற அவர், சமீபத்தில் வெளியாகியகடைக்குட்டி சிங்கம்படத்திலும் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாட தன் சொந்த ஊரான சேலத்திற்கு குடும்பத்துடன் சென்றிருந்த சரவணனுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியானது.

saravanan

ஆனால், தனக்கு சாதாரண காய்ச்சல் தான் என்றும், தற்போது பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும் சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சரவணன் கூறுகையில், சேலத்தில் இருந்தபோது காய்ச்சல் இருந்தது, அது சரியாகாததால் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். பின் சாதாரண காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறியதால் 3 நாட்களில் நலம் பெற்று வீடு திரும்பிவிட்டேன்.

அத்துடன் ஒரு படத்திலும் நடித்து முடித்துவிட்டேன். ஆனாலும், சிலர் இப்போதுவரை தனக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக நினைத்துக் கொண்டு போன் செய்து விசாரித்து வருகின்றனர். அப்படி ஒன்று இல்லை. நான் நலமாக தான் இருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.