• July
    22
    Monday

Main Area

Main



சோத்துலயும் அடிவாங்கியாச்சு சேத்துலயும் அடிவாங்கியாச்சு! பவன் கல்யாண் மீது ஸ்ரீ ரெட்டி அதிரடி புகார்

sri reddy
sri reddy
Loading...

பவன் கல்யாணின் கல்வி சான்றிதழ் அனைத்தும் போலியானது என நடிகை ஸ்ரீ ரெட்டி அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 

காங்கிரஸுடன் சேர விரும்பாத தெலுங்கு சூப்பர் ஸ்டாரான பவன் கல்யாண், அண்ணன் சிரஞ்சீவியிடமிருந்து பிரிந்து ஜன சேனா கட்சியை 2014ல் தொடங்கினார். பவன் கல்யாண் போடும் பொதுக் கூட்டத்திற்கு பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்பரித்தனர். இதனால் அரசியலில் பெரிய இடத்தைப் பிடிக்கலாம் என பவன் கல்யாண் எண்ணினார். இருப்பினும் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் (பீமாவரம் தொகுதி, காஜுவாகா தொகுதி) பவன் கல்யாண் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார். அவரின் கட்சியின் சார்பில் ராஜோலு தொகுதியில் போட்டியிட்ட வரபிரசாத் ராவ் என்பவர் மட்டுமே வெற்றி பெற்றார்.

cc

இந்நிலையில் பவர் கல்யாணின் அனைத்து கல்வி சான்றிதழ்களும் போலியானது என சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி முகநூலில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், “உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் பவன் கல்யாண் , சில நாட்களாக திரையுலகில் முகம் காட்டவில்லை. ஏனெனில் அவர் அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் இருந்தார், சரி தேர்தல் முடிந்து மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்குவார் என அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அரசியலில் களம் கண்ட அவருக்கு, முற்றுலும் சறுக்கு முகமே. அதற்கு காரணம் பவன் கல்யாண் மிகவும் மோசமானவர். ஆட்சி செய்வதற்கு தகுதியே இல்லாதவர். அவர் பத்தாம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறவில்லை. அவர் கல்வியறிவு அற்றவர். அவருடைய கல்வி சான்றிதல் அனைத்தும் போலியானது” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பவன் கல்யாணின் ரசிகர்கள், ஸ்ரீ ரெட்டியை கடுமையாக சாடிவருகின்றனர். 
 

2018 TopTamilNews. All rights reserved.